காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்தது போன்று கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட தவெக
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
— Suresh Elangovan (@sureshelangov12) May 8, 2026
இந்த வீடியோவை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் யார் சொல்வது உண்மை?… https://t.co/cBVm6vSRoW pic.twitter.com/GF8iqrYihj
அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் ஆளுநருக்கு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என டிடிவி தினகரன் புகாரளித்த நிலையில், காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்தது போன்று கையெழுத்திடும் வீடியோவை தவெக வெளியிட்டது. அந்த வீடியோவில் காரில் அமர்ந்த நிலையில் காமராஜ் கையெழுத்திடுவது போன்ற காட்சி உள்ளது, இந்த வீடியோவை எடுத்தது யார்? எந்த இடத்தில் எப்போது எடுக்கப்பபட்டது? எந்த கடிதத்தில் கையெழுத்து போடப்பட்டது போன்ற விவரங்கள் இல்லை.

