காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்..!

 
1

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், தொகுதிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பரப்புரை மேற்கொண்டார்.

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தபோது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தமிழ் ஜனம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு நாளும் வாக்கு சேகரிக்கும்போது தாமரை சின்னத்திற்கு ஆதரவு பெருகிறது என தெரிவித்தார். மது, கஞ்சா போதையால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராம சீனிவாசன் கூறினார்.