காமராஜ் காலி.. அடுத்தது யார்? ஏ.ஆர். ஆனந்தராஜை நியமித்தார் டிடிவி தினகரன்..!
May 13, 2026, 06:10 IST1778632838000
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய கட்சிப் பொறுப்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளராக ஏ.ஆர். ஆனந்தராஜ் (மன்னார்குடி நகரக் கழகச் செயலாளர்) அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளருக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் நியமனம். pic.twitter.com/lIf5PlzunM
— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) May 12, 2026

