லண்டனில் விஜய்- தள்ளிப்போகும் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், செப்டம்பர் 17ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கப்படுவதாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் லண்டன் பயணத்தால் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் காமராஜர் படித்த விருதுநகர் பள்ளியில் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சென்னையிலேயே இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காலை உணவுத்திட்ட விரிவாக்கத்திற்கான தேதியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

