காமராஜர் காலை உணவு திட்டம் - 13 வகை உணவு விநியோக டெண்டர் அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்கான உணவு விநியோகம் தொடர்பாக டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான காலை உணவு விநியோகம் தொடர்பாக டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். 4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும், காலை 7.30 மணிக்குள் பள்ளிக் கூடங்களுக்கு சூடான உணவு கொண்டு சேர்க்கப்பட வேண்டும், 294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும், காலை உணவு 150–200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும், ஒப்பந்ததாரர்கள் பணம் பெற தலைமை ஆசிரியர் ஒப்புதல் கட்டாயம், மொபைல் ஆப் மூலம் உணவு விநியோகம் கண்காணிக்கப்படும்

