திருக்குறளை தந்த திருவள்ளுவரின் சொற்களை மனதில் நிறுத்துவோம் - கமல்ஹாசன்

 
kamal-haasan-344

மானுட குலத்துக்கு மக்கட்பண்பூட்டும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சொற்களை மனதில் நிறுத்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஜனவரி 16ம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். 


இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திருவள்ளூருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரடியால் உலகளந்த  ஈடற்ற படைப்பு, ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தேவை குறையாத கருத்தோடு நிலைத்து மானுட குலத்துக்கு மக்கட்பண்பூட்டும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சொற்களை மனதில் நிறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.