உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் - முதலமைச்சருக்கு கமல்ஹாசன் நன்றி!

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று குறிப்பிட்டு இருந்தார்.
இனிய நண்பரும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான @mkstalin அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் @CMOTamilnadu https://t.co/U5GIiiLKbK
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2023
இந்த நிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், இனிய நண்பரும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன்