தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது - கமல்ஹாசன் பேச்சு!

 
kamal

தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக்கொள்கை அமல்படுத்துவது. இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது.