அமரன் திரைப்பட்டத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், அவர்களது குடும்பங்களின் தியாகத்தையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும்படி ரத்தமும் சதையுமாகத் திரையில் வடித்துக்காட்டி இருக்கிறது #Amaran திரைப்படம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 31, 2024
தன்னைத் தந்து மண்ணைக் காத்த தன்னிகரற்ற தமிழ் வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் சரிதையை… https://t.co/cq1MyzPyH3
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், அவர்களது குடும்பங்களின் தியாகத்தையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும்படி ரத்தமும் சதையுமாகத் திரையில் வடித்துக்காட்டி இருக்கிறது #Amaran திரைப்படம். தன்னைத் தந்து மண்ணைக் காத்த தன்னிகரற்ற தமிழ் வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் சரிதையை திரைப்படமாகத் தயாரித்து இந்திய ராணுவ வீரர்களுக்குப் பெருமை சேர்த்த எங்கள் தலைவர், நம்மவர் திரு.@ikamalhaasan அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. #RMahendran அவர்களுக்கும், @RKFI மற்றும் @turmericmediaTM நிறுவனத்தாருக்கும், இயக்குனர் @Rajkumar_KP அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக எங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் வீரம், தரணி ஆளும்.