கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிடுங்கள் - கமல்ஹாசன் அதிரடி உத்தரவு!

 
kamal

கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள் என கூறினார்.

கூட்டணி அமைத்தாலும் அனைத்து பூத்களிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் இருக்க வேண்டும். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் கட்சியின் தலைவராக, தான் என்ன செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்டுள்ளார் கமல்ஹாசன்.