நடிகர் ஜூனியர் பாலையா மறைவு - கமல்ஹாசன் இரங்கல்!

 
kamal

நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார் . அவருக்கு வயது 70. பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஜூனியர் பாலையா. 1975ம் ஆண்டு 'மேல்நாட்டு மருமகள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை, தனி ஒருவன் , புலி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்  அவர்  உயிர் பிரிந்தது. ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், ஜூனியர் பாலையா மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.