தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதள பக்கத்திலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2023
இந்த நிலையில், சீமானுக்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.