திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் கமல்

 
tn

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி,  காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது இருக்கிறது.  

dmk

அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது.  இந்த சூழலில் திமுக கூட்டணியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இது குறித்த செய்திகள் வெளியாகி வந்தன.

kamal

இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் கமல்ஹாசன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.