"வாக்காளர் சீர்திருத்தம் செய்வதில் ஏன் இவ்வளவுஅவசரம்?"- கமல்ஹாசன்
மக்களாட்சியின் அடித்தளமே வாக்கு வங்கிதான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “மக்களாட்சியின் அடித்தளமே வாக்கு வங்கிதான். தகுதியான ஒருவரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான். அதில் அவசரம் ஏன்? 2026 தேர்தலுக்கு பிறகே SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது. தேர்தல்ஆணையத்தின் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்குஆபத்தானது. வாக்கு திருட்டு சம்பவம் தொடர்பான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அவசரமான எஸ்.ஐ.ஆரால் தான் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெறுகிறது.


