ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது சரியாக இருக்காது - கமல்ஹாசன்
ஒரு படம் வெற்றி பெறும் போது அந்த அங்கீகாரத்தை அனைவரும் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் படம் தோல்வியடையும் போது ஒருவரை மட்டும் குற்றம் சொன்னால் சரியாக இருக்காது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
‘சிங் கீதம்’ திரைப்பட விழாவில் உரையாற்றிய மநீம தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன், “ஒரு படம் வெற்றிபெறும் பட்சத்தில், அந்த வெற்றிக்கான அங்கீகாரத்தை அனைவரும் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால், படம் தோல்வியடையும்போது ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது சரியாக இருக்காது. அதேபோல், படக்குழுவை வைத்து ஒரு படம் நல்ல படம் என்பதைத் தீர்மானிப்பது சரியல்ல. படத்தின் கருவை வைத்துத் தீர்மானிப்பதுதான் சரியானது. அபூர்வ சகோதரர்கள் படத்தின் முதல் 20 நாட்கள் எடுத்த காட்சிகளை திருப்தி இல்லாததால் கைவிட்டோம். பண நஷ்டத்தை பற்றி கவலைப்படாமல், சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். குள்ள மனிதன் கதாபாத்திரத்திற்காக பல இரவுகள் தூங்காமல் யோசித்திருக்கிறோம். லேப் மாடியிலேயே கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினோம்” என்றார்.

