விளையாட்டு வீரர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- கமல்ஹாசன்
விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும், அரசியல் விளையாட்டையும் ஆட வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் PEFI & கமல் பண்பாட்டு மையம் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய கமல்ஹாசன், “விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும், அரசியல் விளையாட்டையும் ஆட வேண்டும். வெறும் டிகிரி வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது. வாழ்க்கையில் முக்கியம் கல்வி; அதைவிட முக்கியம் உடல் ஆரோக்கியம்; விளையாட்டு வீரர்கள் சாதாரணமானவர்களல்ல; விளையாட்டிலும், சினிமா தியேட்டரிலும்தான் சாதி ஒழிந்துள்ளது. படிக்காத மேதைன்னு சொல்றாங்க.. ஆனால் படிக்காம மேடையே ஏற முடியாதுங்க! சினிமா தியேட்டரில் தான் சாதி முதலில் ஒழிந்தது என்று நான் நம்புகிறேன்.. அது வீதிக்கும் வரவேண்டும்... என் ஆயுளில் அதை பார்க்க வேண்டும்” என்றார்.


