“இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்”- கமல்ஹாசன்

 
கமல்ஹாசன்

கூடுதல் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திமுகவுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் 35 பேர் பங்கேற்றனர். திமுக உடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ள மக்கள் நீதி மய்யம் வாக்கு வங்கி அதிகம் உள்ள சென்னை மற்றும் கோவையை மையப்படுத்தி 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் திமுகவிடம் வழங்கி உள்ளது, திமுக கூட்டணியில் சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மநீம-வையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை வழங்கி உள்ள நிலையில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதா இல்லை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா என கமல் தலைமையில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டனர்.
 

சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்ய கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “கூடுதல் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் தனி சின்னம் குறித்து ஆலோசித்துள்ளோம். தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தயாராக உள்ளோம். திமுகவிடமிருந்து அழைப்பு வந்த பின் ஒப்பந்தம் செய்யப்படும். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.