"மாநிலங்களவை பதவிக்காக முதல்வரை சந்திக்கவில்லை"- கமல்ஹாசன்

 
கமல்

ஆளுநர் தொடர்பான வழக்கில் தமிழக அரசு வென்றதற்காகவே கொண்டாடவே முதல்வரை சந்திக்க வந்தேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

Image

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ஆளுநர் தொடர்பான வழக்கில் தமிழக அரசு வென்றதற்காகவே கொண்டாடவே முதல்வரை சந்திக்க வந்தேன். உச்சநீதிமன்ற ஆளுநர் வழக்கில் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டு சொல்ல வந்தேன் . மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக முதல்வரை சந்திக்க வரவில்லை. அதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது” என்றார்.

மேலும் இதுதொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன். உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் திரு. மு.க. ஸ்டாலின். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.