'இந்தியன் 2' குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

 
இந்தியன் 2

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு யு/ஆ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Image

ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள, இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Image

இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு யு/ஆ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முழு நீளம் 3 மணிநேரம் என தணிக்கை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.