மக்கள் நீதி மய்யத்திற்கு 2 தொகுதிகள்... டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என கமல் பிடிவாதம்

 
ச்

டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. திமுகவிடம் 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை மநீம அளித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது.