கொளுத்தும் கோடை வெயில்.. இதை செய்தால் நன்றாக இருக்கும் - அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை..

 
கொளுத்தும் கோடை வெயில்.. சிக்னலுக்கு அருகே இதை செய்தால் நன்றாக இருக்கும் - அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை..


கொளுத்தும் கோடை வெயில். போக்குவரத்து சிக்னலுக்கு அருகே தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொளுத்தும் கோடை வெயில்.. சிக்னலுக்கு அருகே இதை செய்தால் நன்றாக இருக்கும் - அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை..

கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில் பயணம் மேற்கொள்வது என்பதே கடினமான ஒன்றுதான்.. காலை முதலே வெயிலின் தாக்கம் தெரியத்தொடங்குகிறது. அதிலும் அடித்து புடித்து  டிராபிக்கில் சிக்கி, சின்னாபின்னமாகி அலுவலகம் சேல்லும்  இருசக்கர வாகன ஓட்டிகளின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.. அதேபோல் மருந்து விற்பனை பிரதிநிதிகள், உணவு டெலிவரி செய்பவர்கள், கொரியர் பணி செய்பவர்கள் என இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்பவர்களின் நிலைமை கொஞ்சம் கடினமானது தான்..  

கொளுத்தும் கோடை வெயில்.. சிக்னலுக்கு அருகே இதை செய்தால் நன்றாக இருக்கும் - அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை..

அப்படி இருசக்கரவாகனத்தில் பயணம் செய்பவர்கள், அடிக்கடி சிக்னல்களில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.  அப்போது கொளுத்தும் வெயிலினால், அவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.