காந்தியை போல நீங்களும் மக்கள் இதயத்துக்குள் நுழைந்துவிட்டீர்கள்! ராகுலுக்கு கமல் வாழ்த்து

 
kamal haasan

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு, இன்று எண்ணப்பட்டன.  கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ்,  மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 

படம்

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “கர்நாடக தேர்தல் வெற்றிக்கு ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! காந்திஜியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள், அவரைப் போலவே உங்கள் மென்மையான வழியில் உலகின் சக்திகளை அன்புடனும் பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள். துணிச்சலோ, திமிரோ இல்லாமல் உங்களது நம்பகமான அணுகுமுறையால் மக்கள் புதிய காற்றை சுவாசிக்க செய்துள்ளனர். பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்புனீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.