தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு டெல்லியில் உள்ளவர்களுக்கு "வயிற்று எரிச்சல்" ஏற்படுகிறது -கமல்ஹாசன்..!

 
1

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அன்பில் மகேஸிற்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்கு கேட்டு பரப்புரை வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பேசியதாவது:- 

தமிழகத்தில் "நான் முதல்வன்" திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இத்தொகுதியில் ஒலிம்பிக் அகாடமி அமையக் காரணமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பணிகளைப் பாராட்டுகிறேன். நான் கனவு கண்ட கல்வித் திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அவரது முயற்சியால் தமிழகத்தில் பெண் கல்வி விகிதம் 34% அதிகரித்துள்ளது.

திருச்சியை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல அன்பில் மகேஷ்க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதை கல்வி. அத்தகைய கல்வியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை மகேஷ் செய்து வருகிறார். அதனால், தமிழகம் பெண் கல்வியில் 34 விழுக்காடு அதிகரித்துள்ளது. திருச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கல்வியே ஒரே பாதை, அந்தப் பாதையில் பயணிக்கும் அன்பில் மகேஸ் மீண்டும் வெற்றி பெற வேண்டும். 

தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு டெல்லியில் உள்ளவர்களுக்கு "வயிற்று எரிச்சல்" ஏற்படுகிறது. நான் முதல்வன்" திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். இத்தொகுதியில் ஒலிம்பிக் அகாடமி கொண்டுவந்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கல்வி, சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் இருப்பதை கண்டு, டெல்லி ஆட்சியாளர்கள் (மத்திய அரசு) பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாடுகள் சரியில்லை. தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துக்கொண்டு, இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அமைச்சரின் செயல் ஒரு வியாபாரி கூட செய்யாத ஒன்று. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். "இன்றும் நமதே, "நாளையும் நமதே" என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதிச் செயலாளர் விஜயகுமார், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.