ரம்ஜான் பண்டிகை - கமல் ஹாசன் வாழ்த்து!!

 
kamal

தமிழ்நாடு முழுவதும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

tn

 மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள். மக்கா, மதீனா சென்று தர்மம் செய்ய இயலாதவர்கள், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து தர்மம் செய்வது அதற்கு சமமாகும், “செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமென”, வாழ்க்கை நெறிகளை அண்ணல் நபிகள் பெருமான் இஸ்லாமிய பெருமக்களுக்கு கூறியுள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் சாந்தியும், சமாதானமும் நிறைந்திருக்கும்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், "பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என்  வாழ்த்துக்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.