பரமக்குடியில் கமல்ஹாசனின் சொந்த செலவில் நம்மவர் படிப்பகம் திறப்பு

நடிகர் கமலஹாசன் மற்றும் வடஅமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் பரமக்குடியில் நம்மவர் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நடிகர் கமலஹாசனின் சொந்த ஊராகும். பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தில் நடிகர் கமலஹாசனின் கமல் பண்பாட்டு மையம் மற்றும் வடஅமெரிக்கா கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் நம்மவர் படிப்பகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை கமல் பண்பாட்டு மையத்தின் அறங்காவலர் நாராயணன் வள்ளியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த படிப்பகத்தில் இலக்கிய, வரலாற்று புத்தகங்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள், அதிநவீன கணிணிகள், இணையதள வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், கமல் பண்பாட்டு மைய நிர்வாகிகள், வடஅமெரிக்கா கமல் நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கமலஹாசனின் நம்மவர் படிப்பகம் கட்டுவதற்கு தமிழக அரசு மூலம் வேந்தோணி கிராமத்தின் சார்பில் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.