மகா மனிதர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார் - கமல் ஹாசன் புகழாரம்!!

 
kamal

காந்தியடிகளின்  நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

gandhi

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு.ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.