கமல் ஹாசன் பிறந்தநாள் - ஓபிஎஸ், சீமான் வாழ்த்து!!

 
tn

கமல் ஹாசன் 69ஆவது பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ், சீமான் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைதள பக்கத்தில், “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல்வேறு விருதுகளைப் பெற்று, திரைத் துறையில் அளப்பரிய சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்ற “உலக நாயகன்” கமல் ஹாசன் அவர்கள் தனது 70-வது அகவையில் அடியெடுத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 


அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, நாட்டுக்கு சேவை புரிய எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்!

எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்!



திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.