இணையத்தில் வைரலாகும் கமல், ரஜினி பட ப்ரோமோ வீடியோ..! உடனே நீங்களும் போய் பாருங்க..!
கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சேர்ந்து நடிக்கும் படம் குறித்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் நேற்று ஒரு ட்வீட் போட்டது. நாளை மதியம் 12.07 மணிக்கு அடுத்த அப்டேட் என ட்வீட் செய்தது ரெட் ஜெயண்ட் மூவீஸ். அதில் #KHxRK என்கிறே ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருந்தது.
'பதினாறு வயதினிலே' முதல் 'இளமை ஊஞ்சலாடுகிறது' வரை இணைந்து நடித்து வரலாறுகளைப் படைத்த இந்த ஜாம்பவான்கள், மீண்டும் கைகோர்க்கும் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதற்கு பிறகு, இருவரும் பெரிய நட்சத்திரங்களாக வளர்ந்துவிட்டனர். அதன் பிறகு, இருவரும் பல நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்துகொண்டாலும், நண்பர்களக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் திரைப்படத்தில் சேர்ந்து நடிக்கவில்லை.
இந்த சூழலில்தான், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து நடித்தால் சினிமாவின் பொற்காலம் மீண்டும் திரும்பி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
40 வருடங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிப்பதன் காரணமாக படத்தில் என்ன மாதிரியான சம்பவம் எல்லாம் இருக்கும் என்ற பேச்சுக்களும் உருவாகின.படத்தின் ப்ரோமோ ஷூட் சில வாரங்களுக்கு முன்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது.இந்நிலையில் படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.
அதன்படி இன்று ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மொத்தம் 3 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடும் இந்த ப்ரோமோவில் நெல்சன் திலீப்குமாரும், அனிருத்தும் ஆரம்பத்தில் வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ரஜினியும், கமலும் ஒரு அறையில் தங்களுக்கான உடைகள், கூலிங் கிளாஸ், வாட்ச், ஷூ உள்ளிட்டவைகளை தேர்தெடுக்கிறார்கள். அதற்கு பிறகு அறையை திறந்து இரண்டு பேரும் நடந்து வரும்போது; கார் சாவியை ரஜினி ஸ்டைலாக கமலிடம் தூக்கி போட இரண்டு பேரும் காரில் ஏறி அமர்கிறார்கள். அப்போது அனிருத்தும், நெல்சனும் பின்னால் அமர்ந்திருக்க; இதில் யார் ஹீரோ என கமல் கேட்கிறார். கேட்குறாங்கள சொல்லுங்க ஜி என ரஜினி நெல்சனிடம் சொல்லி முடித்ததும்; கமல்ஹாசன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் நீண்ட வருட ஏக்கம் தீர்ந்துவிட்டது. நிச்சயம் இப்படம் மெகா ஹிட்டடிக்கும் என சொல்லி அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

