“நிகழ்ச்சி ரத்து; வேறொரு நாளில் விஜய் வருவார்”- கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்
Oct 16, 2026, 19:45 IST1792160111815
மழை காரணமாக நவராத்திரி விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாணராமன் பேட்டியளித்துள்ளார்.

திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாணராமன், “முதல்வர் விஜய், இன்றைய நவராத்திரி விழாவிலும், பிரார்த்தனையிலும் பங்கேற்பதாக உறுதியளித்திருந்தார். அதற்காக அவர் தயாராகவும் வந்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக மழை பெய்ததால், அவர் வரக்கூடிய நிகழ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், வேறொரு நாளில் அவர் வருவதாக தெரிவித்திருக்கிறார். எப்போது வருவார் என்று கூறவில்லை, அவர் கூறும் போது, தேதியை உங்கள் அனைவரிடத்திலும் தெரிவிப்பேன்” என்றார்.
-

