பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நல்வாய்ப்பு... உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சி!! உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சி

 
tn

உயர்கல்வி குறித்து வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சி இன்று முதல் தொடக்கம்; 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   2022-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அத்துடன் மாவட்ட வாரியாக நிகழ்ச்சி நடைபெறும் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது .

 tn
மே 8: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகபட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம்
மே 9: திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரி
மே 10: செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி
மே 11: காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர்
மே 12: ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர்

tnt

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியானது இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர் .  மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவை  நனவாக்கும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு ,  பட்டப்படிப்புகள்,  பட்டய படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றி  விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.