கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்- பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

 
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்- பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். 18 பேர் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சுரேஷ், பிரவீன், சேகர், மணிகண்டன், மணி, தனக்கோடி, ஆறுமுகம், ராமு, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, இந்திரா, டேவிட், கந்தன், வடிவு, சுப்ரமணி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் உள்ள 60 பேரில், 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்