கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறு- ராமதாஸ், அன்புமணிக்கு நோட்டீஸ்

 
பா.ம.க. ‘35’ : சோதனை முடிந்து சாதனைக் காலம் தொடங்கியது... இனி வெற்றியே! - ராமதாஸ் மடல் பா.ம.க. ‘35’ : சோதனை முடிந்து சாதனைக் காலம் தொடங்கியது... இனி வெற்றியே! - ராமதாஸ் மடல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க தவறினால் 1 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து” -

சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சார்பில் பாமாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ஜூன் 19 மற்றும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றமும், காவல் கண்கானிப்பாளர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரணமாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்பீடு செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், பாமக நிறுவனர் மற்றும் தலைவர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கட்டுப்படுத்தியதாகவும், சாராயம் விற்பனை செய்ய துணை புரிந்ததாகவும், அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்படுவதாகவும், கள்ளக்குறிச்சியில் 30 ஆயிரம் பேர் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அடுத்தடுத்து கிடைக்கும் இன்ப அதிர்ச்சி... மகிழ்ச்சியில் திளைக்கும்  அன்புமணி..!

கள்ளச்சாராயம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை. அவர்களை காப்பாற்ற முயற்சிப்பது குற்றம் என தெரியாதா? விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியாக நேரில் ஆஜராகி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை அளிக்கலாம். அதனால், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.