யாரென்று தெரிகிறதா? வெளியான கல்கி டீஸர்!

 
கமல்ஹாசன்

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள  ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Kalki 2898 AD Trailer Review in Tamil starring Prabhas Deepika Padukone Kalki 2898 AD Trailer : வெளியானது பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் பிரம்மாண்டமான டிரைலர்!

நாக் அஸ்வின் இயக்கத்தில்,  வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள திரைப்படம் கல்கி 2898.  பிரபாஸ் நடித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல பட்டாளங்களே நடித்துள்ளனர். சுமார் 600 கோடி செலவில் 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது கல்கி 2898 AD. அதாவது கருடப் புராணத்தின் படி கிருஷ்ணனின் பத்தாவது மற்றும்  கடைசி அவதாரம் கல்கி. அதன்படி கலியுகத்தில் கடைசிக் கட்டத்தில் தோன்றும் கல்கி துஷ்ட சக்திகளை அழித்து கலியுகத்தை முடித்து வைப்பது போன்று நவீனதொழில்நுட்பங்களை பயன்படுத்தி இப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதலும் கடைசியுமான நகரமாக காசி இருக்கிறது. தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த ஒரு உலகத்தில் உலகை மொத்தமாக தன் வசப்படுத்த முயற்சிக்கிறார்கள் ஒரு தரப்பினர். இவர்களை எதிர்த்து போராடுபவர் பைரவா என்கிற பிரபாஸ். பைரவா உலகின் அழிவை எப்படி காப்பாற்றப் போகிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் துஷ்ட சக்தியாக வில்லனாக களமிறங்குகிறார் கமல்ஹாசன். இத்தனை நாட்களாக ரசிகர்கள் ஆவலாக கேட்டு வந்த கமலின் தோற்றம் இந்த டிரைலரில் மிரட்டலாக வெளியாகியுள்ளது.