கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - 7.35 லட்சம் புதிய பயனாளிகள்

 
மகளிர் உரிமை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தற்போது 7.35 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கும் திட்டம் - காஞ்சியில்  தொடங்கினார் முதல்வர் | முழு விவரம் | Chief Minister launched Rs 1,000 as magalir  urimai thogai scheme at ...

தமிழ்நாட்டில்‌ முத்தமிழறிஞர்‌ தலைவர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ வழிநின்று மக்கள்‌ நலன்‌ சார்ந்த திட்டங்கள்‌ மட்டுமின்றி, மகளிர்‌ நலன்‌ காக்கும்‌ திட்டங்களையும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்‌. மகளிருக்கு அதிகாரம்‌ வழங்கும்‌ முயற்சியில்‌ இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும்‌, பின்னுக்கு தள்ளி முந்தி நிற்கிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில்தான்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களால்‌ 27- 3- 2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள்‌ முழுவதும்‌ ஒயாமல்‌ உழைத்துக்‌ கொண்டிருக்கும்‌ பெண்களின்‌ உழைப்பிற்கு அங்கீகாரம்‌ அளிக்கும்‌ வகையில்‌, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய்‌ 12,000/- உரிமைத்‌ தொகை வழங்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டமானது பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ அவர்கள்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ உயரிய நோக்கம்‌ கொண்டது. 

தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டப்‌ பயனாளிகளின்‌ விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 24- 7-2023 அன்று தொடங்கி வைத்தார்‌. கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம்‌ விண்ணப்பங்கள்‌ அரசுக்கு வரப்பெற்ற நிலையில்‌, அவற்றில்‌ தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம்‌ விண்ணப்பங்கள்‌ தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின்‌ வரலாற்றில்‌ மிகப்‌ பெரிய திட்டமான கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தை, பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌,  1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம்‌ மகளிர்‌, மாதந்தோறும்‌ ரூ.1000/- பெற்று பயன்பெறும்‌ வகையில்‌ தொடங்கி வைத்தார்‌.  மேலும்‌, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தின்கீழ்‌, முகாம்களில்‌ விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில்‌ இருந்த விண்ணப்பங்கள்‌ இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம்‌ பயனாளிகளுக்கும்‌, ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும்‌ 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம்‌ பயனாளிகளுடன்‌ சேர்த்து, மொத்தம்‌ 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர்‌ மாதத்திற்கான உதவித்‌ தொகையினை நாளை (10.11.2023) வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்‌.  

1000 Rs Scheme For Ladies In Tamilnadu Chief Minister Will Launch The  Scheme By Giving A Separate ATM Card | Kalaignar Women Assistance : மகளிர்  ஹேப்பி அண்ணாச்சி.. தனி ஏடிஎம் கார்டு கொடுத்து ...

இத்திட்டத்தில்‌ தற்போது இணைந்துள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம்‌ மகளிர்‌ உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத்‌ தொகை வழங்கிடும்‌ விழா தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ தலைமையில்‌, நாளை (10-11-2023) காலை 10.30 மணியளவில்‌ சென்னை, கலைவாணர்‌ அரங்கத்தில்‌ நடைபெறவுள்ளது.  இதனைத்‌ தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்‌ நாளைய தினமே (10-11-2023 அன்று) மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ தலைமையில்‌, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை வழங்கும்‌ விழா நடைபெறவுள்ளது.