"சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞர்" - கமல் ஹாசன் புகழாரம்

 
tn

மறைந்த முன்னாள்  முதல்வர் மு.கருணாநிதி 101 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் 101வது பிறந்த நாளை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.

kalaignar memorial

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் எடுத்த காரியம் முடிக்காது விடாத நேர்மறைப் பிடிவாதமும் படைத்த மாபெரும் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் இன்று. அவரது நூற்றாண்டு விழா நிறைவுபட நிறைந்திருக்கும் தருணம். இந்நாளில், கலைத்துறை, இலக்கியம், அரசியல், சமூகநீதி என சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.