கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக் கழகம்- மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ரவி

 
முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி..

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். யூஜிசி விதிகள் மற்றும் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால் இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிதி மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிநாளான ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை மட்டும் நிலுவையில் வைத்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.