மதுரையில் கலைஞர் நூலகம் : முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

 
stalin

80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் அயராது பணியாற்றியவர், சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் சண்டமாருதமாக முழங்கியவர்,  13 முறை அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்ற ஐந்து முறை முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்று அரிய பல சாதனைகளை நிகழ்த்தி அழியாப் புகழ் பெற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.

clg

எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், பத்திரிகையாளர், படைப்பாளி ,அரசியல், ஆட்சி, , இயல் துறையில் முத்திரை பதித்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையை போற்றும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு புத்தகங்கள் மீதும் புத்தகங்களை வாசிப்பது தம் வாழ்நாள் முழுவதும்,  தீராப் பற்றுக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரை போற்றும் வகையில்,  சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ttn

அந்த வகையில் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில் 99கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்ட உள்ள அடித்தளத்தில் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்னூல்கள் ,இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 10 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் ரூபாய் 5 கோடியும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நூலகம் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள் ,போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் ,பள்ளி சிறுவர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிகுறி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் எள்ளளவும் இல்லை.