கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா - ஜனாதிபதி வருகை ரத்து

 
tntn

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.   அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு  விடுத்தார்.


mk stalin

இந்நிலையில் சென்னை கிண்டியில் ஜூன் 5ஆம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு  சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி மும்மு பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது, திறப்பு விழாவிற்கு வருமாறு ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவரை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தார்  முதலமைச்சர் மு க ஸ்டாலின்.  இந்த சூழலில் குடியரசு தலைவரின் தமிழ்நாட்டு வருகை ரத்தாகியுள்ளது. 

stalin murmu

அதேசமயம் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5ம் தேதி குடியரசுத்தலைவரின் வருகை ஒத்திவைக்கப்பட்டதால் திறப்புவிழா தேதி மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாகவும்,  குடியரசுத் தலைவர் அளிக்கும் வேறொரு தேதியில் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.