கலைஞர் நூற்றாண்டு பூங்கா- நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை 6:00 மணி அளவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். சுமார் 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும் என கடந்த சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன அது மட்டுமின்றி அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமைநிலர் கூடம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம், ஆகிய சிறப்பு அம்சங்களுடன் 45 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் நுழைவு வாயிலில் உள்ள கவுண்டரில் நுழைவுச்சீட்டை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.