திராவிட இயக்க கொள்கையில் சமரசமற்ற போராளி கலைஞர் - துரை வைகோ

 
rr

 கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மதிமுக சார்பில் அவரது திருவுருவ  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதுதொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது சமூகவலைத்தள பக்கத்தில்,  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் விழா..

rr

ஜூன் - 03
திராவிட இயக்க கொள்கையில் சமரசமற்ற போராளி.. 
   
ஓய்வறியா உழைப்பாளி முத்தமிழ் அறிஞர் அய்யா டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழக்கொளத்தூரில் நடைபெற்றது.
   
நிகழ்வில் கலந்துகொண்டு முத்தமிழ் அறிஞர் அய்யா டாக்டர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தேன்...
   
நிகழ்வில்  மாவட்ட செயலாளர்கள் அரியலூர் க.ராமநாதன், பெரம்பலூர் எஸ்.ஜெயசீலன், தஞ்சாவூர் தெற்கு தமிழ்செல்வன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் செ.துரைராசு, மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி இராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் சகாதேவன், தஞ்சை மாநகர செயலாளர் துரை சிங்கம், ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ் பாபு,  திமுக கிளை செயலாளர் திருவேங்கடம், மதிமுக கிளை செயலாளர் பூந்தை சேட்டு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் திமுக முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். என்று குறிப்பிட்டுள்ளார்.