'காலச்சுவடு' கண்ணனுக்கு 'செவாலியே விருது' - கமல் ஹாசன் வாழ்த்து!!

 
kamal hassan

 'காலச்சுவடு' கண்ணனுக்கு 'செவாலியே விருது' அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

 பிரெஞ்சு அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான செவாலியே விருது காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  பதிப்பு  துறையில் இந்தியாவிற்கும் பிரெஞ்சுக்குமான  உறவை மேம்படுத்தியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் மூலம் தமிழ் படைப்புகளை இந்தியா கடந்து , பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் வேலையை செய்து வரும் கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

nullஇந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழின் மிகச் சிறந்த பதிப்பாளர்களுள் ஒருவரான காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழைக் கெளரவிக்கும் ஃப்ரெஞ்சுக்குப் பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.