மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர் - அன்புமணி ட்வீட்

 
tn

வாழும் நாள் வரை மருத்துவர் அய்யா இட்ட கட்டளைகளை மதித்து கடுமையாக உழைத்தவர் ஜெ. குரு என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காடுவெட்டி குருவுக்கு  ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டது!? ராமதாஸ் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!


இதுக்குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர்; அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைக்க உறுதியேற்போம்!


 

மருத்துவர் அய்யாவின் அன்புக்கு உரியவரும்,  மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குருவின் ஐந்தாவது நினைவு நாளில் அவரது நினைவை போற்றுவோம். வாழும் நாள் வரை மருத்துவர் அய்யா இட்ட கட்டளைகளை மதித்து கடுமையாக உழைத்தவர்; பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர்  மாவீரன். மாவீரனின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்." என்று பதிவிட்டுள்ளார்.