யார் காலிலும் விழுந்து பதவிக்கு வரவேண்டிய அவசியம் அதிமுகவில் இல்லை- கடம்பூர் ராஜூ
காலிலும் விழுந்து பதவிக்கு வரவேண்டிய அவசியம் அதிமுகவில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “எனக்கு நேர்மை பற்றி சொல்லித் தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “யார் காலிலும் விழுந்து எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்தோம். பாஜக மாதிரி மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. வடமாநிலங்களில் மலிவான அரசியல் செய்து, பேரம் பேசும் கட்சி பாஜக” என விமர்சித்துள்ளார்.