பிரதமர் தியானம் செய்வதை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் மோடி தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களின் முடிவில் பிரதமர் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வார் என கூறப்டுகிறது. இதையொட்டி, மே 30-ம் தேதி கன்னியாகுமரி வந்து ஜூன் 1-ம் தேதி வரை தங்குகிறார். 2019 இல், அவர் கேதார்நாத்துக்குச் சென்றிருந்தார், 2014 இல் அவர் சிவாஜியின் பிரதாப்காட் சென்றிருந்தார். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி மே 30-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சென்று அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (29.05.2024) இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.