ஆன்லைன் ரம்மி கம்பெனிகளின் கூட்டாளி ஆளுநர்- கே.பாலகிருஷ்ணன்

 
K balakrishnan

ஆன்லைன் ரம்மி கம்பெனிகளின் கூட்டாளியாக ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read all Latest Updates on and about K. Balakrishnan

திருவண்ணாமலை அடுத்து 5-வது கிலோமீட்டரில் அமைக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு பேரணியாக புறப்பட்டு சிறிது தூரம் (100 மீட்டர்) சென்ற பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், “திருவண்ணாமலை இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி என்பது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுளது. நான்கு வழி சாலைகளை அமைக்காமல் இருவழிச்சாலையாக இருக்கும் பொழுது சுங்கச்சாவடி அமைத்து ஒன்றிய அரசு கொள்ளையடித்து வருகிறது. சுங்கச்சாவடி அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் இருந்த பொழுதிலும் அனைத்து விதிமுறைகளையும் மீறி திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநரை திரும்ப பெறக் கோரி போராட்டம் நடத்தப்படும் - சிபிஎம் கட்சி  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை. மாநில அரசு கூறுவதையும் ஒன்றிய அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும், அதேபோல் 20 சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சுங்கச்சாவடியில் அனுமதி வழங்கிட வேண்டும். 

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல். ஜனநாயகத்திற்கு விரோதம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துவிட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். தங்களது சொத்தையும் இழந்து குடும்பத்தையும் இழந்து நடுவீதியில் நின்று கொண்டிருக்கின்றனர்.  தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியபோதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம். தொடர்ந்து விளக்கம் கேட்கும் தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.