சீமான் பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவி- கே.பாலகிருஷணன் விமர்சனம்

பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு நாங்கள் இறங்கி போக விரும்பவில்லை என கே.பாலகிருஷ்ணன் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநில மாநாட்டை முன்னிட்டு இணையதள துவக்கம் மற்றும் இசை, வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் மத்திய குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன்,"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், பிரகாஷ் காரத் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 த்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.6 நாட்கள் தேசிய சர்வ தேசிய நலன்களை பற்றிய ஆழமான அறிக்கையின் மீதான விவாதமும், இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தை வலுபடுத்தக்கூடிய வழிமுறைகளும், மதச்சார்பற்ற கோட்பாட்டின் அடிப்படையில் மக்களை திரட்டி விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். இந்தியாவில் பாஜக ஒரு கொடுங்கோன்மை ஆட்சியை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரக் கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறியுள்ளது. இந்த தோல்வியை மூடி மறைப்பதற்காக இந்தியாவில் மத வெறியை தூண்டுவது இந்துத்துவா கோட்பாடுகளை திணிப்பதும் மத பதற்றத்தை உருவாக்குவது என பல ஈனத்தனமான செயல்களை செய்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி திட்டமிட்டு மத வெறியை பாஜக உருவாக்கி கொண்டிருக்கின்றது.ஆனால் திருப்பரங்குன்றம் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று பாஜகவின் கன்னத்தில் அரைந்துள்ளார்கள். மும்மொழிக் கொள்கையை பிடிவாதமாக திணிக்கிற வேலையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது.புதிய கல்விக் கொள்கை முன்மொழிக் கொள்கை, மாநில உரிமை பறிப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அஜந்தாவை உருவாக்கி ஒரு பதட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.கடந்த 50 ஆண்டுகளில் இருமுறை கொள்கையின் காரணமாக தமிழகம் வளர்ச்சி பெற்று உள்ளது.மோடி கார்ப்பரேட் அரசால் நாட்டில் சிறுகுறி தொழில்கள் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது.மார்சியம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தரம் கெட்ட அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள். பெண்களை கேவலப்படுத்துவது, பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு நாங்கள் இறங்கி போக விரும்பவில்லை .
இலங்கையில் உள்ள அரசாங்கம் தான்தோன்றித்தனமாக தமிழக மீனவர்களை கைது செய்து கேவலப்படுத்தக்கூடிய வேலைகளை செய்து வருகிறார்கள். குஜராத் ,மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் கொந்தளிக்கும் மோடி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு என்றால் கவலைப்படுவதில்லை. மத்திய அரசுpஏன் அலட்சியப்படுத்துகிறது என என்று மீனவர்களிடம் ஆளுநர் தான் பதில் சொல்ல வேண்டும்.ஆனால் தமிழக அரசு செய்ய தவறியது போல் சொல்லிக் கொண்டிருக்கிறார், அண்டை நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.