பாஜகவை களட்டிவிட்ட அதிமுக- இந்தியா கூட்டணிக்கு பிரச்சனையா?: கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

பாஜக உடன் கூட்டணி இல்லை என சொல்லி, தான் உயிரோடு இருந்த வரை அதை செய்துக்காட்டினார் ஜெயலலிதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்தபோது, அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், தலைமைக் கழக நிர்வாகிகளும், பொதுச்செயலாளரும் கண்டனம் தெரிவித்து, கண்டனம் தீர்மானத்தை கூட நிறைவேற்றினோம். அதன் பிறகு அண்ணாமலை திருந்திவிட்டார் என்று பார்த்தால், பாஜகவை விட, தன்னை முன்னிலை முன்னிலைப்படுத்த, இப்போது அண்ணாவை விமர்சித்துள்ளார். பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார்” எனக் கூறியிருந்தார். 

Image

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “பாஜக உடன் கூட்டணி இல்லை என சொல்லி, தான் உயிரோடு இருந்த வரை அதை செய்துக்காட்டினார் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின் அதிமுகவினரை பாஜகவினர் அடிமைகளாக பார்த்தனர். இதனால் இண்டியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. ஜெயலலிதாவின் வாக்குறுதியை அதிமுக தலைவர்கள் மதிக்கவில்லை. அதிமுக தலைவர்களை பாஜக தலைவர்கள் பொருட்படுத்துவதில்லை. என்றைக்கு இருந்தாலும் எங்கள் மிரட்டலுக்கு அதிமுகவினர் அடிபணிவர் என பாஜக நினைக்கிறது. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. அதிமுகவின் இந்த முடிவால் திமுக கூட்டணியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.” என்றார்.