அறிவிக்கப்படாத அவசர நிலையா? போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்?- கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க பிரிவு செளந்தரராஜன் மதுரை எம்பி வெங்கடேசன், வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

K balakrishnan

மேடையில் பேசிய சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “பாமக பொதுக்குழு மேடையில் பாமக தலைவர் ராமதாஸ் நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டுமென தெரிவிக்கிறார். அப்படியான கட்சி சிபிஎம் இல்லை, தொண்டர்களுக்கானது, அண்ணாமலை சவுக்கால் அடித்து கொள்கிறார், செருப்பு போட மாட்டேன் என அறிவிக்கிறார். நல்ல வேலை அவர் வேட்டி கட்ட மாட்டேன் என அறிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அண்ணாமலை தமிழகத்தை வேறு களத்திற்கு கொண்டு செல்வதாக நினைக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி தமிழகத்தில் பலிக்காது, தாமரை மலரப்போகுது என்று தமிழிசை கூறிவந்தார், ஆனால் தாமரை மலரவில்லை கருகி போய் உள்ளது. அண்ணாமலை நம்புகிற ஆண்டவரே வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாங்கள் கைகோர்க்கிறோம். தமிழகத்தில் போராட்டம் ஆர்பாட்டத்திற்கு நடத்த அனுமதி மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? சீப்பை மறைத்து வைத்துவிட்டதால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் செய்வோம்” என எச்சரித்தார்.