இது பாஜக நடத்திய கருத்து திணிப்பு- கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்து திணிப்பை மக்களிடத்திலே பாஜக ஏற்படுத்தி வருகிறது  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

சென்னை புதுப்பேட்டையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை உடனடியா நிறுத்த வலியுறுத்தியும் அதற்கு கண்டனம் தெரிவித்தும்  பேரணி மற்றும் கண்டன  கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். கண்டன  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “கடந்த பத்தாண்டுகள்  நாசகரமான ஆட்சி நடத்திய மோடியின்  ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு  மதச்சார்பற்ற ஆட்சி அமையும் என்ற அளவுக்கு வாக்காளர்கள்  மத்தியிலே ஒரு  எழுச்சி ஏற்பட்டு இருப்பதை தேர்தல் பரப்புரையின் போது நாடே பார்த்தது. ஆனால் பாஜக திட்டமிட்டு பல ஊடகங்களை பயன்படுத்தி, சில கார்ப்பரேட் நிறுவனங்களை  பயன்படுத்தி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற முறையில் கருத்து திணிப்பை செய்து வருகின்றனர். 

பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள் என்றும் மாற்று ஆட்சி இந்தியாவில் உருவாகும் என்றார். அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் அரசாங்கம் நடத்தி வரக்கூடிய பாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.40000 ஆயிரம் பேரை இதுவரை  கொன்று குவித்து இருக்கிறார்கள்.இது ஒரு மோசமான இனப்படுகொலை உலகம் முழுவதும் படுகொலைக்கு எதிராக மக்கள் திரண்டு கொண்டுள்ளார்கள். இஸ்ரேல் மக்களே இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்ட இதற்கு காரணமாக உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். மோடி அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல சீர்கேடில் இந்த இனப்படுகொலையை  ஆதரிப்பதும் ஒன்று எனவும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேலை கண்டித்து வந்த தீர்மானத்தின் போது இந்தியா நடுநிலை வகித்தது.இந்த கொலைவெற கூட்டத்திற்கு மோடி ஆதரவாக இருக்கிறார்” என்றார்.