அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

 
K balakrishnan

அண்ணாமலை ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டி குறித்து விமர்சித்து பேசிய அண்ணாமலை  " உதயநிதிக்கு பல்லு படாதது போல நெறியாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்" என கூறினார். இது மோசமான இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன்,  அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளன. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

balakrishnan

இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. பொது வெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.